ஜனாதிபதி வேட்பாளரில் கோட்டாவுக்கே முதலிடம்

ஜனாதிபதித் தேர்தலுக்காக பொதுஜன பெரமுன முன்மொழிந்த ஐந்து பெயர்களில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரே முதலில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவின் இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தப் போதே, அவர் இவ்வாறு  கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக பொதுஜன பெரமுன முன்மொழிந்த ஐந்து பெயர்கள் குறித்து தனக்குத் தெரியுமென வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் குறித்த ஐந்து பெயர்களில் முதலில் உள்ளது கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க தயாராகவிருப்பதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ அடுத்த மாதம் இவ்விடயம் குறித்த அறிவிப்பை விடுப்பாரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்