ஏறாவூரில் வாளுடன் மூவர் கைது!

ஏறாவூர் – அத்திப்பட்டியில் முஸ்லிம் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாள், மற்றும் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அவர்கள் மூவரும் நேற்று (திஙகட்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து வாள் ஒன்றும் 10 துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்