தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் மனோ கணேசன்.

மகசின் சிறைச்சாலையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசனின் உண்ணாவிரதம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களில் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்வதாக அமைச்சார் மனோ கணேசன் நேரில் சந்தித்து உறுதிமொழி வழங்கியதை அடுத்து அவர் நீராகாரம் அருந்தி உண்ணாவிரதத்தை நிரைவு செய்தார்.

தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் கடந்த சில தினங்களாக புதிய மெகசின் சிறைச்சாலைக்குள் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.

நீண்ட காலமாக சிரை வைக்கப்பட்டுள்ள தனக்கு பிணை வழங்குமாறு கோரி அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கவிந்தன் கோடீஸ்வரன் ஆகியோரும் ஜனநாயக மக்கள் முன்னனி சார்பில் அமைச்சர் மனோக் கணேசன் தலைமையில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.ஜனகன், மேல்மாகாண சபை உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் விஷ்ணுகாந்தன் ஆகியோரும் அங்கு சென்று அவரைச் சந்தித்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்