அரச பொது ஊழியர் சங்கத்தினர் போராட்டம்!

வடக்கு மாகாண அரச பொது ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

கரைச்சி பிரதேச சபை முன்பாக இந்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுகாதார ஊழியர்களை நியமிப்பது தொடர்பாக வட. மாகாணத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமது போராட்டத்திற்கு தீர்வு வழங்கப்படும்வரை போராட்டம் தொடர்ந்தும்  முன்னெடுக்கப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

வடக்கு மாகாணத்தில் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு சாதாரணதரம் கோரப்பட்டுள்ளதாகவும் தென்னிலங்கையில் அவ்வாறான கல்வி தராதரம் கோரப்படவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் கரைச்சி பிரதேச சபையில் இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களை மீள இணைக்குமாறும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஊழியர்களின் போராட்டம் நியாயமானது என்றும் அவர்களின் நியமனம் தொடர்பாக மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்