பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நாளை மீண்டும் விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகின்றன.

இதுவரை 20 பேரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் பிரதி சபாநாயகர் அனந்த குமாரசிறி தலைமையில் காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடைபெறும் இந்த அமர்வில் சாட்சிகளின் புகைப்படங்களை எடுக்க ஊடகங்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தாக்குதல் தொடர்பாக சாட்சியம் வழங்க அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பணியாற்றும் ஷானி அபேசேகர, பொலிஸ் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தர, பொலிஸ் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் தரங்க பதிரன ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இந்தமாதத்துடன் நிறைவு செய்து, ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி விசாரணை அறிக்கையை வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவுக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்