யாழ்.துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மூன்று இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது தப்பி ஓடிய இளைஞர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் நேற்று (திங்கட்கிழமை) கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மானிப்பாய் சோதனைச்சாவடியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் கொண்ட இளைஞர் குழுவை பொலிஸார் மறித்தபோது அவரகள் பொலிஸாரை தாக்க முற்பட்டமையினால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதன்போது ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து தப்பியோடிய குறித்த இளைஞர் குழுவைச் சேர்ந்த 4 பேரைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்