பூஜித் – ஹேமசிறிக்கு எதிரான மீளாய்வு மனு ஓகஸ்டில் மீண்டும் விசாரணை

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த மீளாய்வு மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. இதன்போதே குறித்த மனுவை ஓகஸ்ட் 01ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் கிடைத்த சரியான புலனாய்வுத் தகவல்களை புறக்கணித்து இருவரும் நூற்றுக் கணக்கான உயிர்களை பலிகொடுப்பதற்கு இடமளித்தமை என கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த இருவருக்கும் பிணை வழங்கப்பட்டமை, சட்ட விரோதமானது என தெரிவித்து சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்