பிரபல எழுத்தாளர் ஷக்திக சத்குமாரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

இலங்கையின் பிரபல எழுத்தாளர் ஷக்திக சத்குமாரவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பொல்ஹாவெல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பொல்ஹாவெல நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பௌத்த பிக்குமாரை தனது எழுத்துக்களால் விமர்சித்தாரென சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய ஐ.நா. ஆதரவு சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார்.

இதேவேளை ஷக்திக சத்குமாரவை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த மாதம் மனித உரிமை செயற்பாட்டாளர்களால் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்