சந்தேகநபர்களை கொலை செய்யும் அதிகாரத்தை பொலிஸாருக்கு யார் வழங்கியது? – ஸ்ரீதரன் கேள்வி

சந்தேகநபர்களை சுட்டுக்கொலை செய்யும் அதிகாரத்தை பொலிஸாருக்கு யார் வழங்கியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார்.

 

கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், கடற்படை, விமானப்படையினரின் பின்புலத்திலேயே யாழில் ஆவா உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் செயற்படுகின்றன.

கிரிஸ் மனிதன், குள்ள மனிதன் போன்ற மக்களை அச்சுறுத்தியவர்களும் இராணுவ முகாம்களிலேயே தஞ்சமடைகின்றனர்.

இதேவேளை, இலங்கை படையணியில் 70 வீதமான படையணிகள் வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழர் வாழும் பகுதிகளில் ஆவா குழு இருப்பது போன்று விம்பத்தை காண்பிக்க அரசாங்கம்  முயல்கின்றது” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்