தேர்தலை நடத்த அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் பொதுஜன பெரமுன

அரசாங்கத்திற்கு தமது பலத்தைக்காட்ட எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சவால் விடுத்துள்ளது.

எனவே தமது வாக்குரிமையைப் பயன்படுத்த மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்தோடு தற்போதைய நிர்வாகம் தொழில்நுட்ப காரணங்களை காரணம் காட்டி தேர்தலை நடத்தாமல் தாமதப்படுத்தி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

எனவே எந்தவொரு தேர்தல் முறையின் கீழும் தேர்தல்களை எதிர்கொள்ள பொதுஜன பெரமுன தயாராக உள்ளது என்றும் தாமதப்படுத்தப்பட்ட அனைத்து தேர்தல்களையும் உடனடியாக நடத்துமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்