யாழ். பல்கலையில் கறுப்பு ஜுலை நினைவேந்தல் நிகழ்வு!

கறுப்பு ஜுலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணியளவில் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் தமிழர்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர்.

கறுப்பு ஜுலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமாகப் பார்க்கப்படுகின்றது.

இந்த கலவரம் இடம்பெற்று இன்றுடன் 36ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களுக்கு நினைவுகூறும் முகமாக தமிழர் தாயகப் பகுதிகளில் பல்வேறு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்