ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தின் பெயர் முன்வைப்பு! கூட்டத்தில் பிரதமர் கூறியது என்ன?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச நிறுத்தப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலை எதிர்கொள்ள கூட்டணி அமைக்க வேண்டுமா என பிரதமர், இந்த கூட்டத்தின் போது உறுப்பினர்களிடம் கேட்டார்.

20 ஆண்டுகளுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் தான் சர்வாதிகாரியாக செயற்படவில்லை என பிரதமர் கூறினார்.

இதனால், கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைய ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதாக பிரதமர் தெரிவித்தார் என ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்