குழந்தை பருவ மேம்பாட்டு திட்டங்களோடு புதிய வரலாற்றில் கால்பதிக்கிறது நைற்றா

குழந்தை பருவ மேம்பாட்டு திட்டங்களோடு
புதிய வரலாற்றில் கால்பதிக்கிறது நைற்றா

குழந்தைகள் மற்றும் பெண்கள் விவாகார அமைச்சின் கீழ் இயங்கும் ஆரம்பகால குழந்தைகள்
மேம்பாட்டுத் திட்ட மேலான்மைப் பிரிவும் ,மற்றும் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையும்
நேற்று புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைசாத்திட்டுள்ளன.

நைற்றா நிறுவனச் செயற்பாட்டில் ஒரு மைல் கல்லாக அமைப்பெற்ற இந்த ஒப்பந்தம் குறித்து
மேற்படி நிறுவனத்தின் தலைவர் நஸிர் அஹமட் கருத்து தெரிவித்தபோது கூறியதாவது-
“குழந்தைகள் அவர்தம் ஆரம்பப் பருவத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய வளர்ச்சிகள்
அபிவிருத்திகள் தொடர்பில் அவர்களுக்கு உதவும்வகையில் சிறப்புத் திட்டங்களை வடிவமைத்து
பயிற்சிசார் நெறிமுறைகள் ஊடாக அவற்றை நடைமுறைப்படுத்துவ தற்கு வழிகோலும்வகையில் இந்த
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டிலுள்ள எல்லா ‘பராமரிப்பு நிலையங்கள் ஊடாக குழந்தைகளின் அபிவிருத்தி                                                          மேம்பாட்டை ஊக்குவிக்கும்; திட்டங்கள் வழி
நடத்தப்படவுள்ளன. அத்துடன் புதிய பராமரிப்பு நிலையங்களை நிறுவுவுதற்கும் இரு
நிறுவனங்களும் இணைந்து செயற்படவுள்ளன. இதனை நாம் நைற்றாவின் ஒரு பாரிய திட்டமாகக்
கருதுகிறோம். மேலும் நாட்டிலுள்ள பாலர் பாடசாலைகளுக்கு உதவி செய்கின்ற பெறுப்பும் இவற்றின் கீழ்
மேற்கொள்ளப்படவுள்ளது. குறிப்பாக நாட்டிலுள்ள பிரதேச செயல கங்களின் இருந்து ஐந்து
பாலர் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கு தேவையான சகல வளங்களையும் வழங்கி
அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இத்துடன் முக்கியமான விடயம் ஒன்றை அவர்களிடம் முன் வைத்துள்ளோன் அதாவது
தமிழ்பிரதேசங்களிலுள்ள பாலர் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளையும்
சிங்களப் பிரதேசங்களிலுள்ள பாலர் பாடசாலைகளில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை
கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும் – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்