கறுப்பு ஜூலைக் கலவரக் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதமை துரதிர்ஷ்டமே!- சிறி

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரங்களில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்றில் தெரிவித்தார். இவ்வாறான படுகொலைகளில் ஈடுபட்டவர்களுக்கு இன்றுவரை தண்டனை பெற்றுக்கொடுக்கப்ப டாமை மிகவும் துரதிருஷ்டமான விடயம் என்றும் அவர் கூறினார்.

இந்த நாட்டில் 36 வருடங் களுக்கு முன்னர் இடம்பெற்ற இனப் படுகொலையையும் பேரவலத்தையும் நான் நினைவுப் படுத்த விரும்புகின்றேன். மிக முக்கியமாக கறுப்பு ஜூலை கலவரத்திலும் வன்முறைகளிலும் 36 வருடங்களுக்கு முன்னர் படு கொலை செய்யப்பட்ட தமிழ் மக் களையும், வெலிக்கடைச் சிறை யில் அடைக்கப்பட்டிருந்த நிலை யில் திட்டமிட்டு படுகொலை செய் யப்பட்ட தமிழ் போராளிகளையும் இன்றைய தினம் நினைவுகூர்ந்து அவர்களது தியாகங்களை நினைந்து இந்த நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்துகின்றோம்.

சரியாக 36 வருடங்களுக்கு முன்னர் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை இரத்த நாடானது. அப்போதையை ஆட் சியாளர்களால் பாதாளத்துக்குள் தள்ளப்பட்டது. அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் மற்றும் வெலிக் கடை சிறைச்சாலையில் தமிழ் இளைஞர்களுக்கு எதிராக இன் வெறி அரங்கேற்றப்பட்ட கறுப்பு ஜுலை நாள் இதுவாகும்.

யாழ். குடாநாட்டின் திருநெல் வேலியின் இடம்பெற்ற கண்ணி வெடி தாக்குதலில் 13 இராணுவ சிப்பாய்கள் பலியானமை இதற் குக் காரணமாகச் சொல்லப்பட் டாலும், தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஆட்சியாளர்களாலும் இனவாதிகளாலும் திட்டமிட்டு நடத்தப்பட் டவை என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

பாதுகாப்பு தரப்பினருக்கு முன்னால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் சதியொன்று உள்ளமை அனை வருக்கும் தெரியும். 13 இராணு வத்தினர் பலியானமைக்கு பொதுமக்கள் படுகொலைகள் நியாயமாகா. இந்த சம்பவமே இலங்கையில் உள்நாட்டு போர் கூர்மையடையவும், 30 வரு டங்கள் உள்நாட்டு யுத்தம் நீடிக்கவும் ஒரு லட்சத்துக்கும் அதிக மான மக்கள் தமது உயிர்களை இழக்கவும் காரணமாக அமைந் திருந்தது.

தொடர்ந்தவன்முறைகளால் கோடிக்கணக்கான ரூபாபெறுமதி யான சொத்துகள் அழிக்கப்பட்டன. பலர் வெளிநாடுகளுக்கு அகதி களாக சென்றனர். பலர் கொல் லப்பட்டனர். இதனால் இலங்கை யின் நற்பெயருக்கு சர்வதேசத் தின் மத்தியில் களங்கம் ஏற் பட்டது. இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இன்றுவரை தண்டனை வழங்கப்படவில்லை என்பது ஜனநாயகம் பற்றி பேசும் இந்த நாட்டின் துரதிருஷ்டம் ஆகும். இந்த நிலை இன்றும் தொடர்வது வேதனைக்குரியது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்