யாழில் மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு இன்று (வியாழக்கிழமை) விஜயம் செய்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுடன் இணைந்து குவைத் செம்பிறைச் சங்கத் தலைவர், இலங்கைக்கான குவைத் நாட்டுத் தூதுவர், சிங்கப்பூர் சுகாதார சேவை தலைமை நிறைவேற்று அதிகாரி மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ஆகியோர் இணைந்து குறித்த மீள்வாழ்வு சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்தனர்.

வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர், யாழ். போதனா வைத்தியசாலையில் இந்த செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மீள்வாழ்வு சிகிச்சை நிலையமானது சிங்கப்பூர் நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு இணையானதாக நாட்டில் வேறு எந்த வைத்தியசாலையிலும் இல்லாத நவீன உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சிகிச்சை நிலையத்தில் எலும்பு முறிவு, மூட்டுக்களில் ஏற்படும் பாதிப்பு மற்றும் நீண்டகாலமாக படுக்கையில் உள்ளவர்களுக்கான சிகிச்சைகள்  போர் மற்றும் விபத்துக்களால் கை, கால்களை இழந்தவர்களுக்கான செயற்கை அவயவங்களை பொருத்துதல் போன்ற சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், வடக்கு ஆளுநரின் செயலாளர் உட்பட வைத்தியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்