இரு உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

தாக்குதலை தடுக்கத் தவறியது தொடர்பாக இரண்டு உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள12 அடிப்படை உரிமைகள் மீறல் மனு மீதான விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் தனது இரண்டு குழந்தைகளை இழந்த தந்தையால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று (வியாழக்கிழமை) காலை முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா தலைமையிலான ஏழு பேர் கொண்ட நீதிபதி அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றம் சாட்டப்பட்டவர்களான கட்டாய விடுப்பு வழங்கப்பட்ட புஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் ஏப்ரல் 9 ஆம் திகதியே தாக்குதல்கள் குறித்து முன் எச்சரிக்கைகளைப் பெற்றதாக வழக்கறிஞர் காமினி பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உளவுத்துறை தகவல்கள் கிடைக்கப்பெற்றும் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்