யாழ். பல்கலை மாணவர்கள் மோதல் – 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்பப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த 9 பேரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

யாழ். பல்லைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள பொறியியல்பீட வளாகத்தில், தொழில்நுட்பப்பிரிவின் முதலாம் வருட மற்றும் இரண்டாம் வருட மாணவர்களிடையே நேற்று (புதன்கிழமை) இரவு மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒன்பது மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

மோதலுக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்