காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட  வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின்  குறைகளை கேட்டறியும் நிகழ்வு

காரைதீவு பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலகத்தின் செயலாளர் எஸ்.ஜெகராஜன்    தலைமையில் இன்று (26) காலை 10 மணிளவில் குறித்து நிகழ்வுகள் நடைபெற்றன.
 அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள்   வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.
 கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அது பிரதேசத்துக்குட்பட்ட மக்களுக்கு வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாக 204 பேருக்கு குறைவீடுகளை திருத்துவற்காக தலா நாற்பதாயிரம் ரூபாய்  வழங்கப்பட்டது.
அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள்
சுவாமி விவேகானந்தர் அவர்கள் தமிழுக்காகவும் தமிழர்கள் நன்றாக வாழ வேண்டும் குரல்கொடுத்த ஒரு மாவீரன் மனிதராக இருந்திருக்கின்றார் ஆகவே நாங்கள் தமிழோடும் தமிழ்த்தேசியத்தோடும் ஐயப்பன் இந்த வரலாறாக இருக்க வேண்டும்
தமிழர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டிய அவசியப்பாடு இருக்கின்றது எப்பொழுதும் தமிழர்கள் ஒன்றாக இருக்கும்போது தான் அந்த சக்தி பலம் சிறந்த முறையில் விளங்கக் கூடியதாக இருக்கும்.
தமிழர்கள் தெரிந்ததில் இருந்து பல்வேறு மாற்று கட்சிகளுக்கு செல்லும்போது தமிழர்களுக்கான பலமிழந்து ஏனைய பேரினவாத சக்திகள் எங்கள் கலாச்சாரத்துக்குள் எமது சமூகத்துக்குள்ளேயே உள்நுழைய  கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. அவர்களின் உள்நுழையும் சந்தர்ப்பத்திலே நாங்கள்  பலமிழநந்தவர்களாக மாறக் கூடியதாக இருக்கும் இதனால் கலாசார சீர்கேடுகள் பிறழ்வுகள் ஏற்படும்.
ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறிப்பிட்டளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அந்தவகையில் சிங்களப் பகுதிகளில் அமைச்சர் தயாகமகே மற்றும் அனோமா கமகே அவர்களும்  முஸ்லிம்களே பல அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களும் இவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் இனத்தை மையப்படுத்தி சேவை செய்பவர்களாக இருக்கின்றனர்.
மன்றம் தமிழர்களுக்காக அவர்களது அமைப்பு சார்ந்த விடயங்களுக்காக சேர்ப்பவர்கள் தமிழர்களாகவே இருப்பர் ஏனைய மதத்தவர்களின் சமூகத்தினர் தமிழர்களுக்காக உள்வாங்கி செயற்படுவது மிக மிக அரிதானது அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய நான் ஹாப்பி பர்த்டே சாய்ந்தபடி எங்களை முன்னெடுக்கும் அதேவேளையில் உரிமை சார்ந்த விடயங்களை விடயங்களை முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது அம்பாறை மாவட்டத்தில் உரிமை சார்ந்த விடயங்கள் அதிகம் இருக்கின்றன.
நிலங்களையும் இருக்கின்ற பிரச்சனை நிலங்கள் அபகரிக்கப்பட்டு தடுக்க வேண்டிய கடமைப்பாடு இருக்கிறது எங்களுடைய மதம் கலாச்சாரம் சார்ந்த விடயங்களில் ஏனையவர்கள் உள்வாங்கும் என்ற நிலைமையை தடுத்து நிறுத்தவேண்டிய கடமைப்பாடு இருக்கிறது.
இன்று பல இடங்களில் புதிதாக பல பவுத்த விகாரைகள் தோற்றம் பெறுகின்றது உங்களுடைய தனித்துவமான தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் சிங்கள மக்கள் இல்லாத அல்லது பவுத்த மதத்தில் இல்லாத இடங்களில் புதிதாக புதிதாக பவுத்த விகாரைகள் மறைக்கப்படுகின்றன இதற்கு தமிழர் குரல் கொடுக்கின்றார்களொழிய சிங்கள இனத்தவர்கள் அல்லது சிங்கள அரசியல் தலைவர்கள் ஒரு நாளும் குரல் கொடுக்கப் போவதில்லை குரல் கொடுத்த சரித்திரமும் இல்லை.
தமிழர்களின் உரிமை சார்ந்த பிரச்சினை அரசியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தமிழர்களே குரல் கொடுத்து வருகிறார்கள் ஏனைய பேரினவாத சக்திகள் பேரினவாத கட்சிகள் அது ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம் அல்லது பொது ஜன பெரமுன வாழ்ந்திருக்கலாம் அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருக்கலாம் இந்த கட்சிகள் என்றும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த சரித்திரமில்லை.
கட்சிகள் பேரினவாத சக்திகள் பேரினவாத கட்சிகளின் கரத்தை தமிழர்கள் பல படுத்துவார்கள் பலதரப்பட்ட சிக்கல்களை தமிழ் சமூகம் எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டி ஏற்படும் இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழர்கள் ஒன்று பயணிக்க வேண்டும். தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.
அந்த வகையிலே அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற ஒரே ஒரு தமிழ்ப்பிரதிநிதியாக நான் இருக்கிறேன்.
எதிர்காலத்தில் ஒரு தேர்தல் வரும்போது தமிழர்கள் பிரிந்தின்று பேரினவாத கட்சிகளுக்கு முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களிக்களிப்பார்களாயின் இருக்கின்ற ஒரே ஒரு பிறகு எதுவும் இல்லாமல் போகும் அவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாது போகும் ஆனால் எங்களது உரிமை சார்ந்த விடயங்கள் மழுங்கடிக்கப்படும் நிலங்களை சுரண்டல் தன்மை இன்னும் கூடுதலாக அதிகரிக்கப்படும்.
அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ் திரித்துவம் இல்லாது போனால் தமிழர்கள் ஆண்டான் அடிமையாக வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அடிமைத்தனமாக இனங்களால் மிதித்து ஒதுக்கப்படும் எங்களுக்காக குரல் கொடுக்க யாரும் இருக்கமாட்டார்கள் அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டிய அபாயகரமான கட்டத்தில் இருக்கின்றோம்.பலமிக்க சக்தியாக இருந்தால் மாத்திரமே அம்பாறை மாவட்டத்தில் ஒரு பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்தார்.
இவ் நிகழ்வுக்கு காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணப்பிள்ளை ஜெயசிறில் மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள், பயனாளிகள் , பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்