வெளிநாடொன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசமாகின; காயங்களுடன் நடு வீதியில் தவிக்கும் பொதுமக்கள்!

வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ, மளமளவென அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியதால் 200 வீடுகள் சாம்பலாகிய பாரிய சோக சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது.

லிமாவில் உள்ள துறைமுக நகரமான சான் ஜூயான் போஸ்காவில், அதிகாலை திடீரென வீடு ஒன்றில் பற்றிய தீ மளமளவென பரவி அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்த போதிலும், இந்த விபத்தில் பிளைவுட்டில் அமைக்கப்பட்டிருந்த வீடுகள் அனைத்தும் சாம்பலாகின. மேலும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தீ விபத்தில் 200 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்