வேலணை பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் நடைபெறுகின்றது

வேலணை பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது.

வேலணை பிரதேச செயலர் பிரிவில் செய்யப்படும் வேலைகள் செய்யப்பட வேண்டிய வேலைகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. குறித்த கூட்டத்தில் பிரதேச செயலாளர் சபையின் தவிசாளர் சபையின் உறுப்பினர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்படும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்