அமெரிக்காவில் தீக்கிரையான வரலாற்று புகழ்மிக்க தேவாலயம்; பெரும் சோகத்தில் கிறிஸ்தவர்கள்!

அமெரிக்காவில் வரலாற்று புகழ்மிக்க கத்தோலிக்க தேவாலயம் ஒன்று தீக்கிரையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

குறித்த தேவாலயம் கடந்த 1895-ம் ஆண்டு மத்திய டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள வெஸ்ட்பேலியா (Westphalia)) என்ற இடத்தில் மரப்பலகைகளில் கட்டப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த தேவாலய வளாகம் முழுவதும் தீப்பற்றிய நிலையில், தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருநாட்கள் நடந்த இந்த பணி நிறைவடைந்த நிலையில், சுமார் 27 கோடி ரூபாய் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

மேலும் விரைவில் தேவாலயத்தில் 125 ஆண்டு விழா கொண்டாட இருந்த நிலையில், இந்த கத்தோலிக்க தேவாலயம் திடீரென தீக்கிரையானது கிறிஸ்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்