சுஷ்மா சுவராஜின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கின்றது – மஹிந்த

இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவு என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கின்றது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.

இந்நிலையில் அவரது மறைவு குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அதில் மேலும் பதிவிட்டுள்ளதாவது, “இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவு என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கின்றது.

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருடன் பழகும் அதிர்ஷ்டம் எனக்கு இருந்தது. அவர் தனது சமகாலத்தவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார்” என பதிவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்