அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் – அருட்தந்தை ஞானப்பிரகாசம்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டுமென மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையிலான குழுவினர் நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக இன்று (புதன்கிழமை) காலை மன்னார் பிரஜைகள் குழுவில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போதே மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய குற்றவியல் நிகழ்வுகளோடு ஒப்பிடும்போது உண்மையிலேயே அரசியல் கைதிகள் குற்றமற்றவர்களாகவே மதிக்கத் தோன்றுகின்றனர்.

சமூக சீர்கேடுகள், தற்போது நடக்கின்ற வன்முறைகள், நிலைமாறு நீதியில் இருக்கின்ற நிலைகுலைவுகள் ஆகியவற்றை எல்லாம் நாங்கள் சிந்திக்கின்றபோது இவர்களின் தடுப்பு அர்த்தம் அற்றதாகவே தோன்றுகின்றது.

11 வருடங்களுக்கு மேலாக அர்த்தமற்ற முறையில் இவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.  அரசாங்கமும் அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் இதனை அலட்சியப்படுத்தாது தொடர்ந்தும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்