வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு விரைவில் வேலைவாய்ப்ப்பு – பிரதமர் உறுதி ; மாவை

மயிலிட்டித் துறைமுக புனரமைப்புப் பணிகள் முடிவுறும் நிலையில் அதனை திறந்து வைக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்ததாகவும் இதற்கு தாம் பதில் வழங்குகையில் மயிலிட்டித்துறைமுகம் வடக்கின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றுதான் எனினும் அத்துறைமுகத்தை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்னமும் குடியமர்த்தப்படவில்லை.

குறித்த மக்களை முதலில் குடியேற்றவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் குறித்த துறைமுகத்தினை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும் குறித்த துறைமுகத்தை அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்துவதற்கு அப்பகுதி மக்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டும்.

மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் தெற்கை மையப்படுத்தியதாக வடக்கிற்கும் வேலைவாய்ப்பை வழங்காது வடக்கு கிழக்கில் எத்தகைய பட்டதாரிகள் மற்றும் வெளிவாரிப்ப ட்டதாரிகள் இருக்கின்றார்கள் என்பதைக் கணக்கில் எடுத்து அதற்கு ஏற்ப வேலைவாய்ப்பை வழங்கவேண்டும்.

குறிப்பாக வெளிவாரிப்பட்டதாரிகளாக பல்வேறு கற்கை நெறிகளில் பட்டதாரிகள் காணப்படுகின்றார்கள். குறிப்பாக வயது வந்தவர்கள் பாடநெறிகளில் தனித்துவமான பட்டங்களைப் பெற்றவர்கள் போன்றவர்களுக்கும் விரைவாக வேலைவாய்ப்பினை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை தாம்முன்வைத்துள்ளதாகவும் பிரதமர் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் தனது செயலாளர் ஊடாக பதிவுகளைப் பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் பனை நிதியத்திற்கு பல மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டபோதும் குறித்த நிதி இன்னமும் விடுவிக்கப்படவில்லை இதனையும் விடுவித்துத்தருமாறும் பிரதமரிடம் கூறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்