வடக்கு ஆளுநரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழு

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவிற்கும் வட.மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

வடக்கு ஆளுநர் செயலகத்தில் குறித்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் தேர்தலொன்று எதிர்காலத்தில் நடைபெறுமாயின் அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களை அரசாங்கம் அழைத்தால், அவர்கள் இந்த கண்காணிப்புக்கு வருவதற்கு அவசியமான காரணங்கள் குறித்து ஆராயும் பொருட்டே இந்த குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

குறித்த நிபுணர்கள் குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில்  ரிக்கார்டோ செல்லெரி, ஹான்ஸ் வெபர், டிமித்ரா, பவல் ஜுர்சாக் மற்றும் லான் மில்லர் ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்