ஐ.தே.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: மங்கள

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி நிச்சயம் வெற்றிப்பெறும். அதனை யாராலும் தடுக்க முடியாதென  அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மங்கள மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியின்  ஜனாதிபதி வேட்பாளரை மிக விரைவில் அறிவிப்போம்

எமது கட்சி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸதான் நிறுத்தப்படுவாரென நான் நினைக்கிறேன்.

ஆனாலும் இதற்கான இறுதி தீர்மானம் கட்சியின் செயற்குழு மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கலந்துரையாடலின் பின்னரே எடுக்கப்படும்.

மேலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஐ.தே.க சிறந்த வெற்றியை தனதாக்கும்” என மங்கள தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்