இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்! இந்தியாவில் வெளியான கருத்து கணிப்பு! வெற்றியாளர் யார்?

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் இந்தியாவில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்களில் அதிக விருப்பம் கொண்ட நபர்களை அறிந்து கொள்வதற்காக இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும், பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் கோத்தபாய ராஜபக்ஷவும் முன்னிலை பெற்றுள்ளனர்.

எனினும் அவர்களுக்கு சாதகமான கொள்கை தொடர்பில் கருத்து கணிப்பில் குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் அந்தந்த கட்சிகளினால் நியமிக்கப்படும் வேட்பாளர்களுக்கு அமைய இந்தியாவின் செயற்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்