நாயாறு நீரேரி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை சீரமைப்பதற்குத் தடையாக வனஜீவராசிகள் திணைக்களம். பிரதேச மக்கள் கவலை

நாயாறு நீரேரி மற்றும் அதனைச்சூழவுள்ள பகுதிகளைச் சீரமைப்பதற்கென, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தபோதும், வன ஜீவராசிகள் திணைக்களம் அப்பகுதியில் பெயர்ப்பலகை நாட்டியுள்ளதால், அந்த சீரமைப்பு வேலைகளைச் செய்யமுடியதுள்ளதாக பிரதேசமக்கள் தெரிவித்தனர்.

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில், 10.08.2019 நேற்றைய நாள் முன்னாள் வடமாகாண சுகாதா அமைச்சர் ப.சத்தியலிங்கம், மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் பிரதேசத்திலுள்ள கிராமமட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கரதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களோடு ஒரு சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர்.

இச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே நாயாறுப்பகுதி பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர்கள் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாயாறு ஏரியினைச் சுத்தப்படுத்துவது, அதனைச் சூழவுள்ள வீதிகளைச் சீரமைப்புச்செய்வது போன்ற பல வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும் வனஜீவராசிகள் திணைக்களம் பெயர்ப்பலகை நாட்டியதால் அந்த அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளமுடியாத நிலையிலை காணப்படுகின்றது.

தமிழ் மக்களின் அபிவிருத்தி வேலைகளைத் தடுப்பதற்காகவே இவ்வாறான பெயர்ப்பலகைகள் அமைக்கப்படுகின்றது. என்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்