சஜித்தையே பரிந்துரைத்துள்ளோம்; அவரே தேர்தலில் வெல்லக்கூடியவர்! – மங்கள தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக் கூடிய வேட்பாளர் சஜித் பிரேமதாஸ என்றுதான் நாங்கள் நினைக்கின்றோம். அவ்வாறு வெற்றிபெறக் கூடிய வேட்பாளர் ஒருவரையே நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்ருமான மங்கள சமரவீர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். அவ்வாறு வெற்றிபெறக் கூடிய வேட்பாளர் ஒருவரை நாங்கள் விரைவில் பெயரிடுவோம். எங்களுக்குப் பல தரப்பட்ட கருத்துக்கள், எண்ணங்கள் இருக்கலாம். ஆனால், வெற்றிபெறக் கூடிய வேட்பாளர் சஜித் பிரேமதாஸதான் என்று நாங்கள் நினைக்கின்றோம்.

ஆயினும் அப்படியாக ஒரு தீர்மானத்தை இதுவரையில் எடுக்கவில்லை. ஏனெனில் அந்தத் தீர்மானத்தை எடுக்கவேண்டியது நாடாளுமன்றக் குழுவும் செயற்குழுவுமேதான். அதனடிப்படையில் நாடாளுமன்றக் குழுவும் மற்றும் செயற்குழுவும் கூடி அங்கு பெரும்பான்மையானவர்கள் என்னத்தைச் சொல்கின்றனரோ அதனைத்தான் கட்சி செய்யும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்