JVP இணையத்தளத்தில் வெளியான செய்திக்கு மன்னார் நகர முதல்வரின் கண்டனம்

JVP இணையத்தளத்தில் வெளியான செய்திக்கு மன்னார் நகர முதல்வரின் கண்டனம்…

எனது குடும்பப் பின்னணியும் வரலாறும் தெரியாத நீங்கள் தெரிந்துகொள்வதற்கு……..

போராட்ட காலப்பகுதிகளில் எம் இனத்திற்காக எங்கள் குடும்பமும் எங்கள் பரம்பரையம் ஆற்றிய சேவைiயை தாங்கள் தெரிந்துகொள்ளுங்கள்
முதல் மன்னார் மாவட்ட தளபதி எனது அண்ணண்.

இராணுவ சுற்றிவளைப்பின்போது முதன் முதலாக தன்னைதானே சுட்டு வீரமரணம் அடைந்தவர் என் அண்ணண்.

அரசியல்துறை வன்னி மகளிர் அமைப்பு பொறுப்பாளர் எனது அக்கா.

வன்னி நிதிப்பொறுப்பாளர் எனது மச்சான்

இது போக எங்கள் பரம்பரையின் உறவுகள் ஈழப்போரில் ஒவ்வொரு துறைகளிலும் பொறுப்பாளராக இருந்து இறுதிவரை மண்ணையும், மக்களையும் நேசித்து களமாடி மாவீரர்களாய் மடிந்துள்ளார்கள், வெளிநாடுகளில் இருந்து பணம் சேகரித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கவில்லை.

எங்கள் குடும்பம் பல காட்டிகொடுப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்டு இறுதி யுத்தம் வரை வன்னியில் இருந்துதான் பிறந்த ஊருக்கு வந்தோம். தாங்கள் எங்கள் வரலாற்றை கொச்சப்படுத்த தகுதியில்லாதவர்கள்.

தாங்கள் தமது இணையதள செய்தியில் குறிப்பிட்டது போல நான் விடுதலைப்புலிகளுக்கு எரிபொருள் கட்தியதாகவும்இ கடத்தியவர்களை காட்டிக்கொடுக்க இராணுவத்திடம் இரண்டுகோடி பணம் பெற்ற விபரத்தையும், அவ்வாறு காட்டிக்கொடுக்கப்பட்டவர்களே கொல்லப்பட்டவர்கள் என வெளியிடப்பட்ட விசனத்திற்கான தரவுகளையும் ஆதாரத்துடன் நிருபிக்கவும்.

தாங்கள் குறிப்பட்டது போல கூட்டமைப்பின் பங்காளிகட்சியின் தலைவருக்கு பெண்களை கூட்டிக்கொடுத்த விடயத்தை பகிரங்க சான்றுடன் நருபிக்கவேண்டும்.
தாங்கள் குறிப்பிட்ட குறித்த பாராளுமன்ற உறுப்பினர் செய்த போதை வஸ்து கடத்தலையும் அதற்கு நான் பொறுப்பாக இருந்து சம்பாதித்த பலகோடிப் பணத்தையும் ஆதாரத்துடன் நிருபிக்கவேண்டும்.

ஜனநாயக ரீதியில் நடைபெறிற உள்ளு10ராட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றவரை, அதாவது மக்களால் தெரிவு செய்யப்பட்டவரை கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் அடிப்படையில் ஆளுமைமிக்க வெற்றிபெற்ற ஒருவரை தலைவர் சிபாரிசு செய்வது பொதுவான விடயம் என்ற அடிப்படை புரியாத கௌரவமான ஊடக தொழிலை நடாத்தி வருகின்றீர்கள், தோற்ற ஒருவரை தெரிவு செய்யவில்லை என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

மேலும் தாங்கள் குறிப்பிட்டது போல எனது தந்தையார் செய்த கடத்தலையும் அவர் சார்ந்திருந்த மாற்று இயக்கத்தையும் யாருடைய சொத்துக்களை பறித்து வைத்திருந்தார் என்ற ஆதாரமான தகவல்களையும் 1998ம் ஆண்டு விடுதலைப்புலிகள் தலைமையால் அவரை சுட்டுக்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்ததையும் ஆதாரத்துடன் சுட்டிக்காட்ட வேண்டும்.

அதன் பின்னர் அவர் எந்த தமிழரசுக் கட்சியின் தலைவரின் ஊடாக விடுதலைப்புலிகளிடம் மன்னிப்பு கேட்டு தப்பித்துக்கொண்டார் என்பதையும் யார் யாரிடம் கொள்ளையடித்தார் என்பதையும் அந்த பணத்தை வட்டிக்கு கொடுத்து தொழில் மேற்கொண்ட விபரங்களையும் ஆதாரத்துடன் நிருபிக்கவேண்டும்.

அமரராகிய என் தந்தையாரின், மன்னார் நகரத்தின் பெரும்பான்மை மக்களின் மனதை வென்ற முன்னாள் நகர பிதாவின் மீது பொய் அவதுறு பிரசுரித்தமைக்காக தங்களுக்கு வன்மையான கண்டனம் தெரிவிக்கின்றேன்.

மேலும் நகரசபையின் பணத்தை எவ்வாறு வட்டிக்கு கொடுப்பது என்பதையும், 15 வீத வட்டிக்கு பணம் கொடுத்த முதலாளிகளையும் ஆதாரத்துடன் தெரியப்படுத்தவும் (பொதுவான அரச நிர்வாக நடைமுறை தெரியாத தங்களுக்கு விளங்கப்படுத்த விரும்புகின்றேன் .

சபையின் செயளாளர், கணக்காளர், உள்ளக கணக்காய்வாளர் இருக்க எவ்வாறு வட்டிக்கு கொடுக்க முடியும், நகரசபையின் வருமானம் சபைத் தலைவரின் கைகளுக்கு கிடைக்குமா, ஒரு ஊடகத்துறைக்கு இவ்விடயம் தெரியாமல் இருப்பது கேளிக்கூத்தாக இருக்கின்றது)

தாங்கள் உண்மையை வெளிக்கொண்டு வரும் கௌரவமான ஊடகத்தொழிலை நடாத்திக்கொண்டு, மெய்நிலை ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்த தவறியுள்ளீர்கள்.

ஊடக தர்மத்தை மீறி அவ்வாறான உண்மையற்ற தகவல்களை பிரசுரித்து பொய் அவதுறுகளைப் பரப்பி எனது பெயருக்கும் என கௌரவத்திற்கும்
, நான் ஒரு ஜனநாயக ரீதியிலான மக்கள் பிரதிநிதி என்ற கௌரவதிற்கும் களங்கம் ஏற்படுத்தியமைக்காக கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு இவ்வாறான அவதுறுகளைப் பரப்பியமைக்காக அதை ஆதாரத்துடன் நிருபிக்க வேண்டிய கடப்பாடு தங்களிடம் உள்ளது.

அதை ஆதார பூர்வமாக வெளிப்படுத்த தவறும் பட்சத்தில் தங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்