மைத்திரி – ரணில் மீண்டும் கைகோர்க்க கடும் முயற்சி! – நட்பு வட்டம் ஏற்பாடு

பழைய பிரச்சினைகளை மறந்து புதிய உறவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையே உருவாக்கும் முயற்சியில் அவர்களின் நட்பு வட்டம் செயற்படத் தொடங்கியுள்ளது.

கம்போடிய பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பிய பின் மைத்திரி – ரணில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

நாடாளுமன்றத்தின் அரச தரப்பின் அதிக ஆதரவைப் பெற்று பிரதமராகி அதன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளராகும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ இறங்கியிருக்கின்ற நிலையில், மைத்திரி – ரணில் இடையே மீண்டும் உறவை ஏற்படுத்தும் செயற்பாடும் மறுபுறம் ஆரம்பமாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்