ஜனாதிபதியாகுவதற்கு முன்னர் பிரதமராகும் முயற்சியில் சஜித்

நாடாளுமன்றத்தின் அரச தரப்பின் அதிக ஆதரவைப் பெற்று பிரதமராகும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ இறங்கியிருக்கின்றார் என்ற புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

இதைத்தான் கடந்த வருடம் ஒக்டோபர் அரசியல் சூழ்ச்சிக்கு முன்னர் மைத்திரி செய்ய முயன்றார். ஆனால், சஜித் பின்னடித்ததால் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். பின்னர் அந்த 52 நாள் அரசியல் சூழ்ச்சி தோல்வியைத் தழுவியது.

இப்போது அதே முறையை மீண்டும் தான் ஜனாதிபதியாகுவதற்கு உரிய சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளும் விதத்தில் சாத்தியமாக்கிக் கொள்ள சஜித் முயல்கின்றார் எனத் தெரிகின்றது. பிரதமராக இருந்தால் ஜனாதிபதித் தேர்தல் பரப்புரை சாதகமாகலாம் என சஜித் தரப்பு நம்புகின்றது. எனவே, அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆதரவு ஒருவருக்கு இருக்குமானால் அவர் பிரதமராக முடியும்.

இதற்கான முயற்சியில் தெற்கில் பிரபல ஊடகம் ஒன்று செயற்படத் தொடங்கியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்