அமரர் ஐயாத்துரை செல்வராசாவிற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதமரின் துயர் பகிர்வு

அமரர் ஐயாத்துரை செல்வராசாவிற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதமரின் துயர் பகிர்வு

வள்ளல் ஐயாத்துரை செல்வராசா ஒரு தமிழீழ விடுதலைப்போராளி. 2009ம் ஆண்டு
ஈழத்தில் தமிழ் மக்கள் அல்லலுற்று அவலப்பட்டு ஆற்றாது அழுது மடிந்து அழிவுற்ற
காலத்தில், அராஜகப் படைகளால் அழிக்கப்பட்ட ஆறாத் துயர்கொண்ட அந்த
நேரகாலத்தில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில்
மிகுந்த நாட்டுப்பற்றுடன் மன, மொழி, மெய்களினால் ஈடுபட்டுத் தலைசிறந்த
ஒத்துழைப்பை நல்கிய மேலான தொண்டன் ஐயாத்துரை செல்வராசா ஆவார்.

அன்று காரியாலயம் நடாத்துவதற்கு இடம் தேவைப்பட்டபொழுது தானே வாடகைப்
பணம் செலுத்தி ஒரு அறை அமைத்து அளித்த பெருமை அவர் வள்ளல்
தன்மையையும் அவர் காலத்தினாற் செய்த உதவியையும் எடுத்துக்காட்டும். அது
மாத்திரமன்றி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாகித் தவழும்போது குரல்
வளையை நசுக்கி அதனை கொன்றுவிட சில பலம் பொருந்திய சக்திகள் முயன்றபோது
அதனை தடுக்கும் வகையில் தார்மீக, அரசியல், பொருளாதார ஆதரவை வழங்கிய
கர்மவீரன்.

தன்னலமற்ற தொண்டனாகச் செயற்பட்ட செல்வராசாவை மறக்க முடியாது. நாடு கடந்த
தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலைக்கு முக்கிய பங்கினை வகிக்கும் என்று அதில்
தன்னை இணைத்துக்கொண்டு முதலாவது தவணைக்காலத்தில் பாராளுமன்ற
உறுப்பினரானார். அத்துடன் ஏனைய பற்பல அமைப்புகளிலும் கூட ஈடுபட்டு தன்னையே
அர்ப்பணித்து, செயலாற்றிய பெருமைக்குத் தகுதி வாய்ந்தவர் செல்வராசாவேதான்.
சிறந்த தொண்டன். கனடா கந்தசுவாமி கோவிலில் முக ;கிய தன்னார்வத் தொண்டனாகத்
திகழ்ந்தவர் இவரே.

அன்னாரின் வீட்டுக்குச் சென்ற ஒருவர் என்னிடம் கூறினார் அங்குள ;ள விடுதலை
தொடர்பான ஆவணங்களையும் படங்களையும் பார்க்கும் போது அது ஒரு தமிழீழ
பொருட்காட்சி மண்டபம் என்று. ஈழமுரசு பத்திரிகை நடாத்துவதற்கு முதுகெலும்பாக                                                                                                   நின்று தாங்கியவர். மேலும் ஈழமுரசு
பத்திரிகையால் நடாத்தப்படும் தேசியத் தலைவரின் பிறந்த நாள் விழாக்களைமுன்னின்று நடாத்தியவர்.                                                    இங்ஙணம் தமது வாழ் நாட ;களையே தொண்டுகளில் ஆழ்த்தி
மனத்தாலும் உடலாலும் வாக்காலும் தம்மால் எவ்வளவு செய்ய முடியுமோ அதற்கு
மேலாகவும் செய்து பண உதவிகளும் நல்கிய இவரது இழப்பு சமுதாயத்திற்கு ஈடு
செய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

“வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்.
சுருக்கமாக கூறுவதாயின் இவர் ஒரு “நாட்டுப்பற்றாளராகத்” திகழ்ந்தவர்.
தன்னை அர்ப்பணித்த சுதந்திர வேள்வியில் நாமும் எம்மை முழுமையாக
அர்பணிப்போமென்று இச்சந்தர்ப்பத்தில் உறுதி எடுத்துக்கொள்வோமாக!
அன்னாரின் பிரிவல் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கு நாடு கடந்த தமிழீழ
அரசாங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்