அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த புனித அன்னம்மாள்

அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த புனித அன்னம்மாள் அவர்களின்               வருடாந்த திருவிழாவும் திருச்சொரூப பவனியும் கொட்டும் மழையிலும் மிகவும்                                                                                 சிறப்பாக நடைபெற்றது.

மத்திய மாகாண அதி வணக்கத்திற்குரிய ஆண்டகை வியாணி               பர்னாண்டோ அவர்களின் தலைமையில் ஆரம்பமான இந்த திருவிழா              முதலில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு விசேட தேவ பிரார்த்தனையினைதொடர்ந்து,              திருச்சொரூப ஊர்வலம் அட்டன் திருச்சிலுவை ஆலயத்திலிருந்து              புறப்பட்டு அட்டன் நகர் ஊடாக சென்று மீண்டும் ஆலயத்தினை சென்றடைந்தது.

இத்திருவிழாவினை முன்னிட்டு  அட்டன் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை                                                                     பலப்படுத்தியிருந்தனர்.

கடந்த 04 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த திருவிழாவில்           நவ நாட்கள் பூஜைகள் நடைபெற்று திருவிழா நடைபெற்றது.

ஆலய பங்கு தந்தை நிவ்மன் பீரிஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற                இந்த திருச்சொரூப பவனியில் கொட்டும் மழையினையும் பாராது சுமார்              ஆயிரக்கணக்கான கிறிஸ்த்தவ பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த திருசொரூப ஊர்வலத்தில் கிறிஸ்த்தவ கீதங்கள் மற்றும் பேன்ட்                                                                                                                                வாத்தியங்கள், துதிப்பாடல்கள், ஆகியனவும் இடம்பெற்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்