தீவகம் மண்கும்பான் பகுதியில் விகாரை !!

மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திற்கும் – முருகன் கோயிலுக்குமிடைப்பட்ட பகுதியில் நேற்றுமுந்தினம் விஜய கலாவின் தீவக இணைப்பாளர் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தீவக அமைப்பாளர் என்றவாறும் தன்னைக் கூறித்திரியும் நபர் ஒருவர் பல பிக்குகளை அழைத்து வந்து ஒரு காணியை விகாரை அமைப்பதற்காக பார்வையிட்டு சென்றுள்ளார்என்று ஊர் மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு அப்பகுதி மக்களின் தகவலின்படி இக்காணியானது இவரது தாத்தாவின் உரிமக்காணியென்றும் அதனையே இந்த பிரபு என்பவர் தென்னிலங்கை பிக்குகளுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் ஆதாரங்களுடன் தகவல்களை தெரிவிக்கின்றனர்.

விரைவில் விகாரையொன்றினை அக்காணியில் அமைக்கும் எண்ணத்துடனேயே பிக்குகள் அக்காணியை பார்வையிட்டு சென்றுள்ளனர் .

குறித்த நபரின் இவ்வாறான செயற்பாட்டால் அங்குவாழ்கின்ற மக்கள் பெரும் விசனம் அடைந்துள்ளார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்