ஜனாதிபதியாக எவரை தெரிவு செய்ய வேண்டுமென்பது குறித்து முன்னாள் பிரதமர் மக்களுக்கு விளக்கம்

உங்களது மனதுக்கு யார் சரியானவர் என்று தோன்றுகின்றதோ அவருக்கு மனசாட்சிக்கமைய வாக்களியுங்கள் என முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

கம்பொல பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டி.எம்.ஜெயரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “நான் 72 வருடங்களாக அரசியலில் இருக்கின்றேன். அந்தவகையில் என்னாலேயே இங்குள்ள பெரும்பாலோனோர்கள் அரசியலில் கால் பதித்துள்ளனர்.

தற்போது நடைபெறவுள்ள தேர்தலுக்காகவே பெரும்பாலானோர் மக்களுக்காக சேவையாற்றுகின்றனர்.

அதாவது மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காகவே அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

ஆகையால் இத்தகையவர்களின் கருத்துக்களை மக்கள் உள்வாங்காமல் உங்களுக்கு பிடித்தவர்களை மனசாட்சிக்கு  அமைய தெரிவு செய்யுங்கள்.

மேலும்  இவ்விடயங்களில் அறிவுப்பூர்வமாக சிந்தித்து மக்கள் செயலாற்ற வேண்டும்.

இதேவேளை லக்ஷ்மன் கிரியெல்ல, மத்திய மாகாணத்தின் முக்கிய அமைச்சராக வருவதற்கு நான் அதிக பங்களிப்பை செய்துள்ளேன்” என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்