அமெரிக்க தூதர ஆலோசகர் – அம்பாறை புத்திஜீவிகளுடனான சந்திப்பு

அம்பாறை புத்திஜீவிகளுடனான சந்திப்பு அமெரிக்க தூதர ஆலோசகர் நெற்றி தேவ் தலைமையில் இன்று (13) காலை கல்முனை விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது இன்று இலங்கையின் தீவில் பரவியுள்ள தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது எவ்வாறெனவும் சிவில் சமூகத்தின் மத்தியில் என்னென்ன திட்டங்களை வகுத்து தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என கலந்துரையாடப்பட்டது.

இதன் பல்கலைக்கழக பீடாதிபதிகள், பள்ளிவாசல் தலைவர் பிரதேச செயலாளர், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர், பொறியியலாளர், அம்பாறை மாவட்டத்திலுள்ள புத்திஜீவிகள், கலந்துகொண்டனர்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள பய உணர்வை தெற்கு முகமாகவும் நாட்டில் தற்போது வெகுவாக பரவி உள்ள சிங்கள பௌத்த தீவிரவாதம் இஸ்லாமிய தீவிரவாதம் என்பவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக கேட்டறியப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்