தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பான கூட்டம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பான கூட்டமும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்  அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருக்கோவில் பிரதேச  எல்லைக்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களது வீடுகளை புனர்நிர்மாணம் செய்ததற்கான காசோலை அனுமதி பத்திரம் வழங்கும் நிகழ்வும் திருக்கோவில் கலாச்சார நிலையத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  ஊடகப் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் அவர்களும், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் அவர்களும், முன்னால் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும் இந்நிகழ்வில் திருக்கோயில்,கல்முனை,நாவிதன்வெளி, பிரதேச செயலாளர்களும் கலந்துகொண்டனர். திருக்கோயில்,காரைதீவு  தவிசாளார்களும் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் ,பொத்துவில்  திருக்கோயில் காரைதீவு ,நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அம்பாரை மாவட்டத்தில் வசிக்கின்ற பெருந்திரளான தமிழ் மக்களும்  கலந்து  கொண்டு சிறப்பித்தனர்.

 

இந் நிகழ்வின் மேலதிக புகைப்படங்களை https://www.facebook.com/profile.php?id=100037806703721   முகநூலில்  Tamilenn East  பார்வையிட முடியும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்