முகத்தை மூடிக்கொண்டு நல்லூர் ஆலயத்திற்குள் நுழைந்த தென்னிந்திய தமிழ் நடிகை!

அண்மைக்காலங்களில் தென்னிந்திய நடிகர்கள் இலங்கைக்கு வருகின்றமை அதிகரித்துள்ளது.

அந்தவகையில் பிரபல தென்னிந்திய நடிகை சுகன்யா ஆன்மிக பயணமாக யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகை சுகன்யா யாழ். நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

அந்த வகையில் நேற்றையதினம் (13) யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு சென்று முகத்தை மூடிக்கொண்டு அடையாளம் தெரியாதபடி மக்களுடன் மக்களாக நின்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இதனையடுத்து நல்லூரானை தரிசித்த பின்னர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில், நல்லூர் ஆலயத்திற்கு வந்து வழிபாடுகளில் கலந்து கொண்டமை ஒரு சிறப்பான தருணம் எனவும், மிகவும் மகிழ்ச்சியா இருந்ததாகவும், நீங்கள் இவ்வாலயத்தை மிகவும் சிறப்பாக பராமரித்து வருகிறீர்கள் உங்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்