விநாயகர் ஆலயத்தில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள கோத்தா!

பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களின் பொருளாதார மற்றும் வீடமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி – கட்டுக்கலை – ஸ்ரீ செல்விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை நன்கு அறிந்து வைத்துள்ளேன். பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பிரச்சினை மற்றும் வீடமைப்பு பிரச்சினை என்பன தொடர்பில் தான் அறிந்து வைத்துள்ளேன்.

தங்களது அரசாங்கத்தின் கீழ் இந்த சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்று கொடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்