வல்வெட்டித்துறையில் ஒருவர் மாயம்

யாழ். வரமராட்சி, வல்வெட்டித்துறையில் நபரொருவரைக் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நெடியகாடு எனும் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணதாஸ் இளங்கோ (வயது – 34) என்பவரையே காணவில்லை என்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை தீர்த்தக்கரைப் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் அவர் இறுதியாக இனங்காணப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவரைக் காணவில்லை என்று அந்த முறைப்பாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்