மலையகத்திற்கு கிடைத்து அமைச்சுக்களில் திட்டமிட்டு வேலை செய்திருந்தால் 20000 மேல் இன்று அரசு உத்தியோகத்தில் மலையக இளைஞர் யுவதிகள் இருந்திருப்பார்கள்.

மலையகத்திற்கு கடந்த காலங்களில் எத்தனையோ அமைச்சுக்கள் கிடைத்தன தோட்ட உட்கட்டமைப்பு,சமூக ஒருமைபாடு மற்றும் கலந்துரையாடல் அமைச்சு,நீதி பிரதி அமைச்சு,தேசிய வீடமைப்பு பிரதி அமைச்சு,கல்வி,விவசாயம்,மீன்பிடி,இந்து கலாசாரம அமைச்சு,பிரதி சுகாதாரம்  அமைச்சு கல்வி ராஜங்கம்,அமைச்சு இளைஞர் வலுவூட்டல்,பிரதி பொருளாதாரம்,பிரதி மின்hசரம்,புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சு,விசேட பிராந்தியங்கள் அபிவிருத்தி அமைச்சு என எத்தனையும் அமைச்சு மற்றும் பிரதி அமைச்சு கிடைத்திருந்தன. இந்த அமைச்சுக்களில் திட்டமிட்டு செயப்பட்டிருந்தால் இன்று அரச உத்தியோகத்தில் இருபாதாயிரத்திற்கும் மேல் மலையக இளைஞர் யுவதிகள் இருந்திருப்பார்கள். ஆனால் இன்று மலையகத்தில் 300 இற்கும் பட்டதாரிகள்,வேலையின்றி இருக்கிறார்கள், இருபத்திமூன்றாயிரத்துக்கும் மேல் க.பொ.த உயர்தாரம்,க.பொ.த சாதாரண தரம் ஆகிய படித்த இளைஞர்கள் வேலையின்றி இருக்கிறார்கள.; இவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருந்தால் தோட்டத்தில் குடும்ப சுமையும் குறைந்திருக்கும.; அதை செய்தோம். இதை செய்தோம். என்று தெரிவிக்கிறார்கள். ஆனால் எமது மக்கள் இருந்த இடத்திலேயே தான் இருக்கிறார்கள். என அருணலு மக்கள் முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான கே.ஆர்.கிசான் தெரிவித்தார்.

கடந்த தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை மாதச் சம்பளம் தொடர்பாகவும் இலங்கை தமிழ் மக்கள் எதிர்க்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டமை தொடர்பாக மலையக மக்களை தெளிவுபடுத்தும் முதலாவர் கூட்டம் ஒன்று நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நேற்று (14.08.2018 ) நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்;ந்து உரையாற்றுகையில் மலையகத்தை பிரித்து தாருங்கள் என்று யாரும் கேட்கவில்லை யாழ்பாணத்தை பரித்து தாருங்கள் என்று யாரும் கேட்கவில்லை அரசியல் வாதிகள் நாட்டை பிரித்து கேட்டார்கள்.அவர்களுக்கு தேவை அடிப்படை வசதிகளையே கேட்கின்றனர். அவர்களுக்கு தேவையானது கல்வி சுகாதார,பொருளாதார தொழில் ரீதியான தேவைகள் ஆனால் இன்று எமது நாட்டில் இவற்றை முறையாக கையாளப்படுவதில்லை. இங்கு தொழிவாய்ப்புக்கு இனத்தின் மொழியின் அடிப்படையாக கொண்N;ட வழங்கப்படுகின்றன.
வளங்கள் முறையாக சமமாக பகிரப்டுவதில்லை இதனால் எமது நாடு பிரிவினை வாதத்தினை நோக்கி தள்ளப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகள் அவ்வாறான நிலைபாடுகள் இல்லை. அங்கு வைத்தியரென்றாலும் சரி தொழிலாளி என்றாலும் சரி மொழி பேதங்களும் கிடையாது. அவரவருக்குள்ள உரிமைகள் சரியாக வழங்கப்படுகின்றன. அதனால் அந்த நாடுகள் வேற்றுமைகளை களைந்து அபிவிருத்தியை நோக்கி நகர்கின்றன. ஆனால் நாம் ஒவ்வொரு நாளும் வாழ்வதற்காக போராடிக்கொண்டிருக்கின்றோம்.  இதற்கு சிறந்த உதாரணமாக ஊவா மாகாணத்தில்  ஒரு தடைவை சச்சிதாநந்தன் 89000 வாக்குகளை பெற்றார். ஆனால் அவர் தமிழர் என்பதனால் அவருக்கு முதலமைச்சு பதவி கிடைக்கவில்லை. இது தான் எமது நாட்டின் நிலைமை இதனை இல்லாது ஆக்கப்பட வேண்டும்.

இதனையே நான் ஐக்கிய நாடுகள் சபையில் வழியுறுத்தினேன் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் எனவே எதிர்காலத்தில் ஐ எல.ஓ. குழுவை சேர்ந்து சிலர் இலங்கைக்கு வருகை தந்து இந்த விடயம் தொடர்பாக ஆராய உள்ளார்கள். அதற்கு நாம் தேவையான ஏற்பாடுகளை இப்போது இருந்தே செய்ய வேண்டும் தோட்டங்கள் நட்டத்தில் போனால் அதனை பொறுப்பேற்க எத்தனை நாடுகள் உள்ளன. கென்யா சீனா போன்ற நாடுகள் போதுமான சம்பளத்தினை வழங்கி தோட்டங்களை பொறுப்பேற்க தயாராக உள்ளனர்.ஆகவே முடியாவிட்டால் அவர்களிடம் ஒப்படைத்து விடலாம்.
இந்திய வம்சாவழி தொடர்பாக பொறுப்பு கூற வேண்டிய நிலையில் இலங்கை,இந்திய ,பிரிதானிய ஆகிய நாடுகள் உள்ளன. அது தொடர்பாகவும் நான் ஐக்கிய நாடுகள் சபையில் சுட்டிக்காட்டினேன்.இம்மக்களின் மேம்பாட்டுக்கு உதவு வேண்டும். என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்கள் மலையக இளைஞர் யுவதிகளுக்கு தொழிவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக பிரித்தானியா ஓலண்ட் போன்ற் பல நாடுகள் முன்வந்துள்ளது.எனவே அதனை பெற்றுக்கொள்வதற்கு தேவையான வழிவகைகளை வகுக்க வேண்டும் அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இன்று தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக தெரிவித்து இரண்டு ஏக்கர் வீதம் பிரித்து கொடுத்து தோட்டங்களை துண்டாட நினைக்கிறார்கள்.அதனால் தோட்டத்துறையில் உள்ள சுமார் 40000 மேற்பட்ட எமது தோட்ட நிர்வாகத்துறை சார்ந்தவர்கள் தொழிலை இழஙக்க வேண்டிய நிலை ஏற்படும் இவர்கள் என்ன செய்வார்கள்.அது மட்டுமல்லாது உங்களது சேம லாப நிதியம் ஓய்வூதிய நிதியம் ஆகிய வற்றிக்கு யார் ஒப்பமிடுவது என்று சிந்தித்து பாருங்கள் இன்று இந்த தோட்டத்துறை இயங்குவதனால் தான் மலையக நகரங்களில் உள்ள வர்த்தகர்கள் இருக்கிறார்கள். தோட்டங்கள் மேலும் துண்டாடப்பட்டால் மக்கள் வேலையின்றி தலைநகரங்;களை நோக்கி நகர்ந்து விடுவார்கள.; அப்போது எமது வர்த்தக சமூகத்தினரும் பாதிக்கப்படுவார்கள்.தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகிறது என்று சொல்லிக்கொண்டு அரசாங்கம் தனியார் தோட்டங்களை ஊக்குவிக்கின்றது.அவற்றிக்கு மானியம் வழங்குகின்றது.அப்படி என்றால் தோட்டங்களை மேம்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது அதற்கு எமது தலைவர்கள் என்ன செய்துள்ளார்கள்.

தோட்டங்கள் இல்லாவிட்டால் மலையகத்தில் சுற்றுலா துறை ஒன்று இருக்காது அதனை தொடர்ந்து எமது சமூகம் சின்னபின்னமாகி பாரிய பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் ஆகவே அதற்கு இடமளிக்க முடியாது. நாம் இதனை பாதுகாத்து எமது சமூகமும் ஏனைய சமூகங்களை போல் வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும். எனவே தான் நுவரெலியா மாவட்டத்திற்கு தொழில் வாய்ப்பு வழங்கும் போது விகிதாசார பொறிமுறை ஒன்றினை அமுல்படுதப்பட வேண்டும.; என்று கோரி வருகின்றோம்.
எனவே எதிர்கால சமூகத்தினை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயப்பட வேண்டிய காலம் கனிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்திற்கும் தோட்டத்தொழிலாளர்கள் அமைப்பானர்கள்,இளைஞர் யுவதிகள் என சுமார் 1000 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.
இது குறித்து வைத்தியர் கே.ஆர். கிசான்,பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்