நிரந்தர குடிநீர் திட்டங்களை செயற்படுத்த வேண்டும் – ரெலோ அமைப்பாளர் ச.கீதன்

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக கிளிநொச்சியில் பல கிராமங்களில் குடிநீர் தேவைக்காக சிறுவர்கள் பெரியவர்கள் உட்பட பலர் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார்.
வறட்சியினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்து பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்,ஆடைத் தொழிற்சாலைக்கு செல்லும் பணியாளர்கள் அன்றாட தேவைக்கு நீர் இன்றி பல அசோகரியங்களை எதிர் கொள்கின்றனர்.
இதனால் பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், நீர் வழங்கல் சபைகள் கூடிய கவனம் எடுத்து தேவைக்கேற்ப இடங்களில் நீர் தாங்கிகளை அமைத்து நீர் விநியோகங்களை மேற் கொள்ள வேண்டும் குறிப்பிட்டார்.
பொன்னகர், மழையாளபுரம், பாரதிபுரம், தொண்டமான்நகர், அக்கராயன் போன்ற கிராமங்களுக்கு முதற் கட்டமாக நிரந்தர குடிநீர் திட்டத்தினை செயற்படுத்த வேண்டும்
இவ் விடயங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என மேலும் தெரியப்படுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்