ஐ.தே.க. தலைமையிலான புதிய கூட்டணி குறித்து சனியன்று இறுதி முடிவு

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணி  (ஜனநாயக தேசிய முன்னணி) தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை இறுதி முடிவெடுக்கப்படும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்துடன், கூட்டணியை நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் திகதியும் அன்றைய தினம் நிர்ணயிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன்போது கூட்டணி விவகாரத்தைக் கையாள்வதற்கு உப குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ கணேசன்,

“நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அமைக்கப்பட்ட உப குழு எதிர்வரும் சனிக்கிழமை கூடவுள்ளது. இதன்போது ஜனநாயக தேசிய முன்னணி என்ற கூட்டணி தொடர்பில் இறுதித்  தீர்மானம் எடுக்கப்படும். இதன்போது இந்தக் கூட்டணியை நாட்டுக்கு அறிவிக்கும் திகதியும் நிர்ணயிக்கப்படும்.

நிர்ணயிக்கப்படும் தினத்தன்று, கூட்டணி ஆவணத்தில் பங்காளித் கட்சித் தலைவர்கள் கையெழுத்திடுவதும், கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவிப்பும் ஒருசேர நடைபெறும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்