நெற்றியில் குங்குமப் பொட்டுடன் பள்ளிவாசலுக்கு சென்ற கோட்டாவுக்கும் மஹிந்தவுக்கும் அமோக வரவேற்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய அறிக்கப்பட்ட பின்னர் அவர் மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

விகாரைகள், ஆலங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் என அனைத்து மதஸ்தலங்களுக்கும் சென்று ஆசி பெறுகின்றார்.

அந்த வகையில் நேற்று கண்டிக்கு சென்ற கோட்டாபய, கட்டுகலை ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்திற்குச் சென்றிருந்தார்.

பின்னர் அங்கிருந்து கண்டி மீரா மகாம் பள்ளிவாசலுக்கும் சென்றுள்ளார். பள்ளிவாசலுக்கு சென்ற கோட்டா மற்றும் மஹிந்த உள்ளிட்டவர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தில் வைக்கப்பட்ட குங்கும பொட்டுடன் அவர்கள் கைகளில் தாமரை மொட்டை ஏந்திக்கொண்டு பள்ளிவாசலுக்கு சென்றதை காணக்கூடியதாக உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்