கல்முனை மாநகர முதல்வர் றகீப் அவுஸ்திரேலியா பயணம்

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் நாளை மறுதினம் சனிக்கிழமை (17) அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகின்றார்.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அமைந்துள்ள ஆர்.எம்.ஐ.ரி. பல்கலைக் கழகத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள செயலமர்வு ஒன்றில் பங்குபற்றுவதற்காகவே கல்முனை முதல்வர் அங்கு செல்கின்றார். இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினால் இவர் இச்செயலமர்வுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

மாநகர சபைகளின் சொத்து நிர்வாகம், ஸ்மார்ட் சிட்டி கட்டுமாணம், திண்மக் கழிவகற்றல் சேவையில் எதிர்நோக்கும் சவால்களை வெற்றி கொள்ளல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து இந்த செயலமர்வில் ஆராயப்படவுள்ளதுடன் அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களுக்கான களச்சுற்றுப் பயணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த செயலமர்வில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியா செல்லும் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள், சில  நாடுகளின் முக்கிய நகர முதல்வர்களுடன் பிரத்தியேக சந்திப்புகளை நடாத்தி, கல்முனை மாநகர அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் செயலகம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்