அட்டாளைச்சேனையில் பதற்றம்! நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையின் திடீர் முற்றுகைக்குள் ஒலுவில்!

அட்டாளைச்சேனை பிரதேச பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய கிராமங்கள் இன்று அதிகாலை முதல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்தே பொலிஸாரும் அதிரடிப்படையினரும் வீடுவீடாக சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நூற்றுக்கணக்கான படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் விபரங்கள் தொடர்பில் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் செய்தியாளர்கள் தெரிவித்தள்ளனர்.

இந்த தேடுதல் நடவடிக்கைக்கு 300 ற்கும் மேற்பட்ட பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் குறித்த பிரதேசத்திலிருந்து தகவல் கிடைக்கப்பபெற்றுள்ளது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்