கவனயீனத்தால் காவுகொள்ளப்பட்ட சிறுவனின் உயிர்

திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேன் ஒன்று, திடீரென இயங்கி நகர்ந்ததால் வேனுக்கு அருகில் இருந்த சிறுவன் அதில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கொக்கரெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வேனொன்று பாதசாரிகள் இருவர் மீது மோதியுள்ளது.

நேற்றிரவு 11.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 87 மற்றும் 63 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் கொக்கரெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகிய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்