கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த ரணிலுக்கு ஓரிரவு போதும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமயிலான அரசாங்கம் நினைத்தால் ஒரு இரவுக்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முடியும் என்று அம்பாரை ,கல்முனை பிராந்திய சிக்கன கூட்டுறவுச் சங்க சமாசனத்தின் தலைவரும், மூத்த தொழிற்சங்க வாதியுமான எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

கல்முனையில் உள்ள ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்..

ஜனாதிபதித் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது.  இந்நிலையில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு  பெருந் தேசியக் கட்சிகள் முழுமூச்சாய் உள்ளன.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்தி தருவதன் மூலம்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் வாக்குகளை சுளையாகபெற்றுக் கொள்ள முடியும். இதனை தரமுயர்த்துவதற்கு அமச்சரவைத் தீர்மானம் போதுமானது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம்  உடனடியாக தரமுயர்த்தப் படுவதை தவிர்ப்பதற்கு  முஸ்லிம் அரசியல் வாதிகள் கடைந்தெடுத்த தந்திரமாகவே இதனை நாம் பார்க்க  வேண்டியுள்ளது.

தமிழ்மக்கள் கொலைகாரர்களுக்கும், கொள்ளைக் காரர்களுக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்பதினால் தமிழ் மக்களின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே கிடைக்கும் என்று நினைத்து தமிழ்மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து தருவதில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அரசாங்கம்  நழுவல் போக்கைக் கைக்கொள்ளக் கூடாது.

தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரித்த  காரணத்தினாலேயே  ராஜபக்‌ஷ யுகம் என்று ஒன்று முதல் முதல் உருவானது என்பதனை இத்தருணத்தில் நினைவு படுத்துகின்றேன் என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்