அம்பாரை சிக்கன கடனுதவும் கூட்டுறவுச் சங்க சமாசத்துக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும்.- எம்.இராஜேஸ்வரன்

அம்பாரை மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் நலன் கருதி 1986ம் ஆண்டு உருவாக்கப் பட்ட  கல்முனை, அம்பரைப் பிராந்திய சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்க சமாசனம் கடந்த காலங்களில் மிகவும் வினைத்திறனுடன் இயங்கி வருகின்றது.

இன்று அந்தச் சங்கம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையாக உள்ளது.  இந்நிலையில் இச் சமாசனத்துக்கு  புத்துயிர் கொடுத்து எமது மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கு  இம்மாவட்டத்தில் உள்ள  தமிழ் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், அரச உயரதிகாரிகள் , கூட்டுறவாளர்கள் யாவரும் பேதங்களை மறந்து பொதுநோக்குடன் செயற்படவேண்டிய காலத்தின் தேவையாகுமென  கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம். இராஜேஸ்வரன் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

கல்முனைப் பிரதேசத்தில்  சமூக செயற்பாட்டாளராகத் திகழ்ந்த  அமரர்.பி.சண்முகம்  இந்த சமாசனத்தின் தலைவராக செயற்பட்ட போது  35 சிக்கன கடனுதவு கூடுறவுச் சங்கங்கள் இச்சமாசனத்தில் பணியாற்றினர். திருக்கோயில், ஆலையடிவேம்பு, காரைதீவு, கல்முனை வடக்கு, நாவிதன்வெளி பிரதேச பிரிவிலுள்ள சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கங்கள்  பொதுமக்களுக்கு  பலவகையான சேவைகளை வழங்கிய வரலாறுண்டு.

2019,2020 ஆம் நடப்பு வருடத்துக்கான  புதிய தலைவராக தொழிற்சங்கவாதி எஸ். லோகநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.  இவரின் காலத்தில் மீண்டும் இச்சமாசனம் உயிர்ப்புப் பெறும் என்ற நம்பிக்கையுண்டு. கால நடை வளர்ப்பு.பொண் தலைமைத்துவக் குடுமபங்களுக்குசுய தொழிலுக்கான உதவியாக கைத்தறிகளை வழங்கல், கல்முனை நகரில் கோப்சிற்றி ஒன்றை திறத்தல் போன்ற முன்மொழிவுகளை முதற் கட்டமாக நடைமுறைப்படுத்த புதிய தலைவர் எஸ்.லோகநாதன் கங்கணம் கட்டியுள்ளார். இவ்வாறான சூழலில் அம்பாரை மாவட்டத் தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ள அனைவரும்  இந்தச் சமாசம் மீள் எழுச்சி பெற முடியுமான பங்களிப்பை வழங்க வேண்டும். அத்துடன் கிழக்கு மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் கூட்டுறவு அமைச்சு என்பன தமது பங்களிப்பை வழங்க வேண்டும்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்